2 டப்பிங் சீரியல்களை களமிறக்கிய ஜீ தமிழ்


சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில், டப்பிங் தொடர்கள் மீண்டும் களமிறங்குகின்றன. இந்த சேனலில் ஒளிபரப்பான டப்பிங் சீரியல்கள் வரவேற்பைப் பெற்ற நிலையில் அவை நிறுத்தப்பட்டு தமிழில் தயாரான தொடர்கள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டு வந்தன.

தற்போது 2 டப்பிங் சீரியல்களை ஒளிபரப்ப ஜீ தமிழ் முடிவு செய்துள்ளது. அதன்படி திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 3 மணிக்கு ‘நானே வருவேன்’ என்ற தொடரும் இரவு 10.30 மணிக்கு ‘லட்சுமி கல்யாணம்’ என்ற தொடரும் வெளியாகிறது.

‘நானே வருவேன்’ தொடர், இந்தியில் ராதா மோகன் (Pyar Ka Pehla Naam) என்ற பெயரில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்றது. இதில் ஷபீர் நாயகனாகவும் நிஹாரிகா ராய் நாயகியாகவும் நடித்துள்ளனர். 10.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள ‘லட்சுமி கல்யாணம்’, இந்தியில் பாக்கியலட்சுமி என்ற பெயரில் ஒளிபரப்பாகி வரவேற்பைப் பெற்றத் தொடர். இதில் ரோஹித் சுசாந்தி நாயகனாக நடிக்க ஐஸ்வர்யா கரே நாயகியாக நடித்துள்ளார்.