நலன் குமரசாமி இயக்கத்தில் கார்த்தி


சென்னை: நலன் குமரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம், ‘வா வாத்தியார்'. இதில் சத்யராஜ், ராஜ்கிரண், கீர்த்தி ஷெட்டி, ஜி.எம்.குமார் என பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

காமெடி டிராமா படமான இதன் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியிடப் பட்டது. வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் கார்த்தியின் அருகில் எம்ஜிஆரின் வேடமணிந்து கலைஞர்கள் நிற்பது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.