நடிகர், நடிகைகளுக்கு துபாயில் விருந்து


சாந்தனு, ஆனந்தி, பிரபு நடித்த படம், ‘ராவணக் கோட்டம்’. விக்ரம் சுகுமாரன் இயக்கிய இதைத் தயாரித்தவர் தொழிலதிபர் கண்ணன் ரவி. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டை துபாயில் பிரம்மாண்டமாக நடத்திய இவர், இப்போது துபாயில் ‘பராக்' என்ற இந்தோ-அரேபிய உணவகத்தை திறந்துள்ளார். அங்கு தமிழ் திரையுலகினரை அழைத்து சிறப்பு விருந்து வைத்துள்ளார்.

இதில், சரத்குமார்-ராதிகா, பாக்யராஜ்-பூர்ணிமா, பிரகாஷ் ராஜ், சுந்தர்.சி,வெங்கட் பிரபு, விஷால், சாந்தனு, கீர்த்தி சுரேஷ், சித்தி இட்னானி, சாக்ஷி அகர்வால், அபர்ணதி, ஸ்ரீநாத் பாஸி, யுவன் சங்கர் ராஜா, அம்மா கிரியேஷன்ஸ் சிவா,சேவியர் பிரிட்டோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், கதிர் ஆனந்த் எம்.பி உட்பட பலர் கலந்துகொண்டனர். தனது தயாரிப்பில் உருவாகும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கண்ணன் ரவி தெரிவித்துள்ளார்.