மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க பெண் ரயில் ஓட்டுநருக்கு அழைப்பு


ஐஸ்வர்யா எஸ்.மேனன்

சென்னை: மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நாளை (ஜூன் 9) பதவிஏற்கிறது.

இந்த பதவியேற்பு விழாவில் அரசியல் கட்சித் தலைவர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்கள் மட்டுமின்றி, சாதாரண குடிமகன்கள் சிலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் மூத்த உதவி ரயில் ஓட்டுநராகப் பணிபுரியும் ஐஸ்வர்யா எஸ்.மேனன் என்பவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர் 2 லட்சம்மணி நேரம் ரயில் ஓட்டுநராகப்பணியாற்றி உள்ளார். குறிப்பாக, வந்தே பாரத், ஜனசதாப்திரயில்களில் ஓட்டுநராகப் பணியாற்றி உள்ளார்.

தற்போது அவர் சென்னை சென்ட்ரல்-விஜயவாடா மற்றும் சென்னை சென்ட்ரல்-கோவை வந்தே பாரத் ரயில்களில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார்.

ஐஸ்வர்யா மேனன் தனது பணியில் காட்டும் சுறுசுறுப்பு மற்றும் ரயில்வே சிக்னலிங் பற்றியஆழமான அறிவுக்காக மூத்த அதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.