பாலகிருஷ்ணா சர்ச்சை: நடிகை அஞ்சலி விளக்கம் 


விஸ்வக் சென், அஞ்சலி நடித்துள்ள தெலுங்கு படம் ‘கேங்ஸ் ஆஃப் கோதாவரி’. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் சமீபத்தில் நடந்தது. விழாவில் நடிகைகள் நேஹா ஷெட்டி, அஞ்சலி, படத்தின் இயக்குநர் உட்பட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக நடிகர் பாலகிருஷ்ணா பங்கேற்றார். அப்போது மேடையில் நிற்பவர்களைத் தள்ளிநிற்குமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் அங்கிருந்த அஞ்சலியை திடீரென தள்ளிவிட்டார். பாலகிருஷ்ணாவின் இந்த நடத்தை சமூக வலைதளங்களில் வைரலானது. நடிகர் விஸ்வக் சென், அவர் ஜாலிக்காக அப்படி செய்தார் என்றார். ஆனால், இந்திப்பட இயக்குநர் ஹன்சல் மேத்தா உட்பட பலர் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகை அஞ்சலி, "பாலகிருஷ்ணாவும் நானும் பல ஆண்டுகளாக நட்புடன் இருந்து வருகிறோம். பரஸ்பர மரியாதையை பேணி வருகிறோம். கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அவருடன் மேடையில் பங்கேற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கு நன்றி" என்று கூறியுள்ளார். இதை
யடுத்து இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.