ரேஷன் விநியோக முறைகேடு வழக்கில் வங்காள நடிகைக்கு அமலாக்கத் துறை சம்மன்


கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ரேஷன் விநியோக திட்டத்தில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு வரும் ஜூன் 5-ம் தேதி ஆஜராகும்படி வங்காள நடிகை ரிதுபர்ணா சென்குப்தாவுக்கு அமலாக்கத் துறை நேற்று சம்மன் அனுப்பியது. கடந்த 2019-ம் ஆண்டில், ரோஸ் வேலி பொன்சி ஊழல் தொடர்பாக நடிகை ரிதுபர்ணா சென்குப்தாவை அமலாக்கத் துறை விசாரித்தது. ரோஸ் வேலி குழுமத் தலைவர் கவுதம் குண்டுவுடன் ரிதுபர்ணா சென்குப்தா பல வெளிநாடுகளுக்கு பயணம் சென்றதாகவும், திரைப்படங்களின் விற்பனை மற்றும் தயாரிப்பில் அவருக்கு உதவியதாகவும் கூறப்படுகிறது.

x