ரூ.25 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: நாக்பூரில் 4 பேர் கைது


நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர்.

ராகுல் வாசுதேவ் என்பவர் போலீஸில் அளித்த புகாரில், “கடந்த திங்கட்கிழமை இரவு முகநூலில் ‘குயிக் பக்’ என்ற திட்டம் குறித்து விளம்பரம் வந்தது. அதில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டபோது, ரூ.2 லட்சம் கொடுத்தால் ரூ.8 லட்சம் தருவதாக கூறினார்கள். கரன்சி நோட்டுகளை அச்சடிக்கும் இயந்திரங்களை அவர்கள் வைத்துள்ளதாக அறிகிறேன்" என்று கூறியிருந்தார்.

இதன் அடிப்படையில் போலீஸார் 4 பேரை கைது செய்தனர். மேலும் 44 பண்டில்களில் இருந்த ரூ.25 லட்சம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். ஒவ்வொரு பண்டிலின் இருபுறமும் உண்மையான பணத்தை வைத்துவிட்டு, மற்றவற்றை அவர்கள் கள்ள நோட்டுகளாக வைத்திருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.