ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’ படப்பிடிப்பு நிறைவு


சென்னை: ஜெயம் ரவி, நித்யா மேனன் ஜோடியாக நடித்துள்ள படம், ‘காதலிக்க நேரமில்லை’. யோகி பாபு, லால், வினய், லக்‌ஷ்மி ராமகிருஷ் ணன், பாடகர் மனோ, டிஜே பானு, ஜான் கொக்கேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்துள்ளது. எம்.செண்பகமூர்த்தி, ஆர்.அர்ஜுன் துரை இணை தயாரிப்பு செய்துள்ளனர். கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விரைவில் டீஸர் மற்றும் பாடல் வெளியீடு இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.