229 பேருடன் சென்ற சிங்கப்பூர் விமானம் நடுவானில் குலுங்கியதில் ஒருவர் உயிரிழப்பு, 30 பேர் காயம்


பாங்காக்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் ரக விமானம் ஒன்று லண்டனின் ஹீத்ரூ சர்வதேச விமான நிலையத்திலிருந்து 229பேருடன் சிங்கப்பூருக்கு நேற்றுசென்றுகொண்டிருந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீரென விமானம் நடுவானில் பயங்கரமாக குலுங்கியது. இதனால்,பயணி ஒருவர் உயிரிழந்தார். 30 பேர்காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. தீவிர விபத்தைத் தடுக்கும்பொருட்டு, விமானம் அவசரமாக தாய்லாந்து தலைநகர் பாங்காக்விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இது தொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “211 பயணிகள், 18 விமான ஊழியர்களுடன் லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த எங்கள் போயிங் ரக விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது கடுமையாக குலுங்கியது. இதனால்விமானம் பாங்காக் நகருக்கு திருப்பப்பட்டு அங்கே அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்க தாய்லாந்து அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

பாங்காக் நகருக்கு எங்களுடைய குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்தில் பயணி ஒருவர்உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்துக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்’’ என்று குறிப்பிட்டுள்ளது.

x