சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு மனித வள விருது


சென்னை: மனித வளத்தில் சிறந்த நடைமுறைகளுக்கான விருது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (ஃபிக்கி) சார்பில், மூன்றாவது மனிதவள மேலாண்மை உச்சிமாநாடு நடைபெற்றது.

இதில்,பொது மற்றும் பெரிய நிறுவனங்கள் பிரிவின்கீழ், சிறந்த மனிதவள நடைமுறைகளுக்கான வெற்றியாளராக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு ‘ஸ்கோர் 2024' விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது, நேர்மறை மற்றும் பயனுள்ள பணிச்சூழலை வளர்ப்பதில் அர்ப்பணிப்பு மற்றும் புதுமையான உத்திகளை வெளிப்படுத்தியதற்காக வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் தலைமை பொது மேலாளர் (மனிதவளம் மற்றும் சட்டம்) ஜி.ராஜரத்தினம் பெற்றுக்கொண்டார். கூடுதல் பொது மேலாளர் (மனித வளம்) டி.பி.வினோத் குமார், துணை பொது மேலாளர் (மனிதவளம்) டாக்டர் பி.ரூபா ராணி, மேலாளர் (மனிதவளம்) ஆர்.ஜி.ரஞ்சித் உடன் இருந்தனர்.