கும்பகோணத்தில் அண்ணாமலை உருவப்படம் எரிப்பு


கும்பகோணம்: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகையை அவதூறாக விமர்சித்து வரும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை கண்டித்து, அவரது திருவுருவப்படத்தை கொளுத்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் சாரங்கபாணி சன்னதி தெருவில் உள்ள மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு தஞ்சாவூர் வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உருவப்படம் எரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். கும்பகோணம் மாநகராட்சி மேயர் க.சரவணன், ஐ.என்.டியு.சி. மாவட்ட தலைவர் பி.செல்வராஜ், மாநகர து.தலைவர்கள் டி.நெல்சன், என். நாராயணன், ஏ.ஆர்.எம். ராஜ், மாநகர செயலாளர் செல்வராஜ் மாவட்ட அமைப்பு சாரா தலைவர் டி.முருகன் மற்றும் ஏராளமான பங்கேற்றனர்.

இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகையை அவதூறாக விமர்சித்து வரும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை கண்டித்து, அவரை உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தி, அவரைக் கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்.