முதல்வர் வருகை: ஜூலை 11ம் தேதி சேலத்தில் ட்ரோன்கள் பறக்க தடை!


சேலம்: தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் வரும் 11ம் தேதியன்று, டிரோன்கள் பறக்க தடை விதித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர், தருமபுரி மாவட்டத்தில் வரும் 11ம் தேதி நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் ஊரகப் பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தினைத் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் 11ம் தேதியன்று காலையில் தமிழக முதல்வர் சேலம் மாவட்டம் காமலாபுரம் விமான நிலையம் வருகை தருகிறார்.

அங்கிருந்து தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிக்கு செல்கிறார். பின்னர், தருமபுரியில் இருந்து மீண்டும் அவர் சென்னை திரும்புகிறார். இதனையொட்டி, சேலம் மாவட்டத்தில் 11ம் தேதியன்று, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார்.