கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் 11 பேருக்கு 3 நாள் போலீஸ் காவல்


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டு 21 பேரைக் கைது செய்தனர்.

அதில் கன்னுக்குட்டி(எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா மற்றும் சின்னதுரை, நடுப்பையன், கதிரவன், கண்ணன், மாதேஷ், சக்திவேல், சிவக்குமார், பன்சிலால், கவுதம்சந்த் ஜெயின் ஆகிய 11 பேரை 5நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க,சிபிசிஐடி போலீஸார் ஜூன் 28-ம்தேதி கள்ளக்குறிச்சி தலைமைக் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, 11 பேரையும் சிபிசிஐடிபோலீஸார் கள்ளக்குறிச்சி மாவட்டதலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதைத் தொடர்ந்து திங்கள் முதல் புதன் மாலை வரை இவர்களை காவலில்எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி விசாரணைக்காக போலீஸார் அழைத்து சென்றனர்