32 முறை ரத்த தானம் செய்து இருக்கிறேன்: திண்டுக்கல் எம்.பி. பெருமிதம்


திண்டுக்கல்லில் நடந்த ரத்த தான முகாமைத் தொடங்கி வைத்த ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. படம்: நா.தங்கரத்தினம்

திண்டுக்கல்: போதை கலாச்சாரத்துக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திண்டுக்கல் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம் நேற்று நடந்தது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாலாஜி தலைமை வகித்தார். செயலாளர் முகேஷ் முன்னிலை வகித்தார்.

திண்டுக்கல் எம்.பி. ஆர்.சச்சிதானந்தம் முகாமை தொடங்கிவைத்துப் பேசும்போது, ‘‘நான் இதுவரை 32 முறைரத்த தானம் செய்துள்ளேன். ரத்ததானம் செய்வது உடல் நலத்தைபராமரிக்க பயன்படுகிறது. போதை பழக்கமுடையோர் ரத்த தானம் செய்ய முடியாது. போதை கலாசாரத்தை தவிர்க்க ரத்த தானத்தை ஊக்குவிப்பது அவசியம்’’ என்றார்