நெல்லை அருகே ஆட்டுக்கிடையில் புகுந்து 15 ஆடுகளை கடித்து கொன்ற வெறிநாய்கள்


நெல்லை: நெல்லை மாவட்டம் பணகுடி அருகே தோட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த ஆட்டுக்கிடையில் வெறிநாய்கள் புகுந்து 40-க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்துள்ளது. இதில் 15-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகின.

நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் பணகுடி அருகே உள்ள சைதம்மாள்புரத்தில் உள்ளது. இந்த தோட்டத்தில் பணகுடியை சேர்ந்த கிருஷ்ணன், கண்ணன், மகேஷ் ஆகியோர் தங்களது வளர்ப்பு ஆடுகள் 250 க்கு மேற்பட்டவைகளுக்காக அங்கு கிடை அமைத்துள்ளனர்.

இந்நிலையில் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆடுகளை நேற்றிரவு நான்குக்கு மேற்பட்ட வெறிநாய்கள் புகுந்து கடித்து குதறி உள்ளது. இதில் 40க்கு மேற்பட்ட ஆடுகள் காயம் அடைந்துள்ளன. மேலும் 15க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் ஆடு வளர்க்கும் விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து பணகுடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு அரசு உரிய நிவாரண வழங்க வேண்டும் வெறி நாய்களை பணகுடி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் பிடித்து கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்