தொடர் மழை எதிரொலி: வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை


கோவை: வால்பாறை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்துள்ள வால்பாறை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் தொடர்மழையின் காரணமாக வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்ட அறிக்கையில், "கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (ஜூன் 20) விடுமுறை அளிக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.