தனுஷின் ‘ராயன்’ ரிலீஸ் எப்போது?


நடிகர் தனுஷின் 50-வது படமாக உருவாகி இருக்கிறது ‘ராயன்’. தனுஷ் நடித்து இயக்கியள்ள இந்தப் படத்தில், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ், அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வட சென்னை பின்னணியில் உருவாகியுள்ள இதன் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் நிறைவடைந்ததாக தனுஷ் தெரிவித்திருந்தார்.

இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாயின. இந்நிலையில், ஜூலை 26-ம் தேதி ‘ராயன்’ வெளியாகும் என அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.