தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவர் நியமனம்


சென்னை: தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மு.ராஜாராம் நியமிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்த உத்தரவை மனிதவள மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக இருந்தஓய்வுபெற்ற நீதிபதி பி.தேவதாஸ், கடந்த ஏப்.20-ல் தனதுபதவியை ராஜினாமா செய்தார். புதிய தலைவரை தேர்ந்தெடுக்கமுன்னாள் நீதிபதி ஜி.எம்.அக்பர்அலி தலைமையில் தேர்வுக்குழுஅமைக்கப்பட்டு, தேர்வு நடந்து வருகிறது.

இந்நிலையில், லோக் ஆயுக்தாவின் தலைவராக மூத்த உறுப்பினராக உள்ள ஓய்வு பெற்ற ஐஏஎஸ்அதிகாரி மு.ராஜாராம் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைவர் தேர்வாகும் வரை, ராஜாராம் அப்பதவியில் இருப்பார்.