பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து


சென்னை: பிரதமராக 3-வது முறை பதவியேற்றுள்ள மோடி, மாநில உரிமைகளை மதித்து ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்று வாழ்த்து செய்தியில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

தொடர்ந்து 3-வது முறையாக பிரதமர் பொறுப்பேற்றிருக்கும் நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துகள். பிரதமராக தாங்கள் அரசியலமைப்பை உயர்த்திப் பிடிக்கும் வகையில் உண்மையாக பணியாற்றுவீர்கள் என்றும், நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை தொடர்வீர்கள் என்றும், கூட்டுறவு கூட்டாட்சியியலை முன்னெடுப்பீர்கள் என்றும், மாநில உரிமைகளை மதித்துநடப்பீர்கள் என்றும், ஜனநாயகத்தை பாதுகாப்பீர்கள் என்றும் நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.