211 தொன்மையான கோயில்களில் திருப்பணி


சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தொன்மையான கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் வகையில் திருப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்கிடும் வகையில் மாநில அளவிலான வல்லுநர் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு இணை ஆணையர் (திருப்பணி) பொ.ஜெயராமன் தலைமை தாங்கினார்.

இதில், கும்பகோணம் லட்சுமி நாராயண பெருமாள், திருவெண்காடு சுவேதாரண்யேசுவர சுவாமி, திருப்பாதிரிப்புலியூர் வீரஆஞ்சநேயர், மயிலாப்பூர் அங்காளபரமேஸ்வரி, சைதாப்பேட்டை கடும்பாடி சின்னம்மன் உள்ளிட்ட 211 கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, மாநில அளவிலான வல்லுநர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் கோயில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படும் என இணை ஆணையர் தெரிவித்தார்