கூடலூர் | ஓவேலியில் காட்டுமாட்டை வேட்டையாடிய முக்கிய குற்றவாளி கைது


குற்றவாளி கைது

கூடலூர்: ஓவேலியில் காட்டு மாடு வேட்டையாடப்பட்டது தொடர்பாக முக்கிய குற்றவாளியை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து கூடலூர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டம் ஓவேலி வனச்சரகத்திற்குட்பட்ட பரன்சைட் காப்பி தோட்டத்தில் கடந்த ஜன. 25 ஆம் தேதி துப்பாக்கியால் சுடப்பட்டு காட்டுமாடு இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காட்டு மாடு வேட்டையாடப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பாக வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான முல்லைநகரைச் சேர்ந்த உதயகுமார் (40) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த கள்ள துப்பாக்கிக்கு பயன்படுதப்படும் தோட்டாக்கள் 2 மற்றும் துப்பாக்கி வெடிக்க பயன்படுத்தக்கூடிய கரி மருந்து ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து உதயகுமாரை போலீஸார் கூடலூர் நீதிமன்ற நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து அவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் காவலில் வைக்கப்பட்டார்.