திருவள்ளூர், திருத்தணி கிளை சிறைகளில் அடிப்படை வசதிகள்: மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆய்வு


திருத்தணி கிளை சிறையில் திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜெ. ஜூலியட் புஷ்பா தலைமையில், ஆட்சியர் பிரபுசங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவள்ளூர்: உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, திருவள்ளூர், திருத்தணி கிளை சிறைகளில் அடிப்படை வசதிகள் குறித்து திருவள்ளூர் மாவட்டமுதன்மை அமர்வு நீதிபதி தலைமையில் கூட்டாய்வு நடைபெற்றது.

உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, திருவள்ளூர், திருத்தணி கிளை சிறைகளில் அடிப்படை வசதிகள் குறித்து, திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிஜெ. ஜூலியட் புஷ்பா தலைமையில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் கூட்டாய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் இரு கிளை சிறைகளில் உள்ள கைதிகளுக்கு அளிக்கப்படும் குடிநீர், உணவுஉள்ளிட்டவை தரமாக வழங்கப்படுகிறதா? கழிப்பறைகள் மற்றும் சுற்றுப் புறங்கள் தூய்மையாக உள்ளனவா? என்பது குறித்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி உள்ளிட்டோர் கைதிகளிடம் கேட்ட றிந்தனர்.

தொடர்ந்து, அவர்கள், மருத்துவர்கள் வருகை பதிவேடு, கைதி ஒப்படைப்பு பதிவேடு, காப்பு புத்தகம் (பாரா), சிறை பதிவேடு, ஆயுத அறை, சமையலறை, சட்ட சேவை மையம், கைதிகளின் நேர்காணல் அறை போன்றவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜூலியட்புஷ்பா உள்ளிட்டோர், சேதமடைந்த கட்டிடங்களை அகற்றிவிட்டு, புதியகட்டிடங்கள் கட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தினர்.

இந்த ஆய்வின்போது,மோட்டார் வாகன சிறப்பு நீதிபதி சரஸ்வதி, தலைமை குற்றவியல் நடுவர் மோகன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் தீனதயாளன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அரிக்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.