திமுக அரசின் பணிக்கு கிடைத்த வெற்றி: முதல்வருக்கு கமல்ஹாசன் பாராட்டு


கோப்புப்படம்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேற்று விடுத்த அறிக்கை: திமுக அரசு செய்து காட்டிய பணிகளால் கிடைத்த வெற்றியை அதன் தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் அறுவடை செய்திருக்கிறது.

மக்களுக்காகச் சிந்தித்து, மக்கள் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடத்தப் பெறும் நல்லாட்சிக்கு ஆதரவளிக்க மக்களும் தயாராக இருப்பதையே இந்த மாபெரும் வெற்றி காட்டுகிறது.

இந்தியாவைக் காக்கும் போரில், திமுகவுடன் இணைந்து களம் கண்டகூட்டணிக்கட்சியினருக்கும், மக்கள் நீதி மய்ய தொண்டர்களுக்கும், எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த தமிழகமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். நாம் பெற்றிருக்கும் இந்த வெற்றி இந்தியாவுக்கு வழியும், ஒளியும் காட்டக் கூடியவை. இந்தியா வாழ்க, தமிழகம் ஓங்குக, தமிழ் வெல்க.