திமுகவினரின் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு கேட் போட்ட மழை @ காஞ்சிபுரம்


காஞ்சிபுரத்தில் வாக்கு எண்ணும் மையத்தின் வெளியே கொட்டி தீர்த்த கனமழை.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இன்று மாலை திடீரென பெய்த கனமழையால் திமுகவினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.

காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள், அண்ணா பொறியில் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இதில், ஆரம்பம் முதலே திமுக வேட்பாளர் க.செல்வம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார். இதனால், தங்களின் வெற்றி உறுதி என திமுகவினர் மகிழ்ச்சியடைந்தனர்.

அதனால் வாக்கு எண்ணும் மையத்தின் வெளியே வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட தயராக இருந்தனர். இந்நிலையில், மாலையில் திடீரென கருமகேங்கள் திரண்டு பலத்த மழை கொட்டியது. இதில், சாலைகளில் மழை நீர் வெள்ளமாக ஓட்டியதால் பட்டாசு வெடித்து வெற்றிக்கொண்டாடத்தில் ஈடுபட இருந்த திமுக தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.