காஞ்சிபுரம் | திமுக வேட்பாளர் க.செல்வம் 9,661 வாக்குகள் முன்னிலை


காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிடும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் 2-வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் க.செல்வம் 9,661 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். தொடர்ந்து 3-வது சுற்றிலும் அவருக்கே அதிக வாக்குகள் விழுந்துள்ளன.

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய மக்களவை உறுப்பினர் க.செல்வம், அதிமுக சார்பில் ராஜசேகர், பாமக சார்பில் ஜோதி, நாம் தமிழர் கட்சி சார்பில் சந்தோஷ்குமார் ஆகிய போட்டியிட்டனர்.

இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற நிலையில் திமுக வேட்பாளர் செல்வம் 27,362 வாக்குகளும், இவருக்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 17,701 வாக்குகளும், பாமக வேட்பாளர் ஜோதி 8,401 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் வி.சந்தோஷ்குமார் 6,107 வாக்குகளும் பெற்றிருந்தனர். தொடர்ந்து 3-வது சுற்றுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து திமுக வேட்பாளர் செல்வத்துக்காக அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன.