ஜெயங்கொண்டம் அருகே நீரில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு


பிரதிநிதித்துவ படம்

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே ஏரியில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்குமார் - விஜயா தம்பதியர். இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு திவ்யதர்ஷினி(4), திவ்யதர்ஷன்(3) என 2 குழந்தைகள்.

இந்நிலையில் சுரேஷ்குமார் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு உள்ள ஆயாக்குளம் எனும் ஏரிக்கு இன்று (ஜூன் 03) மாலை குளிக்க சென்றுள்ளார்.
அங்கே 3 பேரும் குளித்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக குழந்தைகள் இருவரும் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீஸார் குழந்தைகளின் உடலை கைப்பற்றி, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2 குழந்கைகள் உயிரிழந்த சம்பவம் கல்லாத்தூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.