கோவில்பட்டி | அகில இந்திய ஹாக்கி 5-ம் நாள் போட்டியில் போபால் அணி வெற்றி


போபால் அணி வெற்றி

கோவில்பட்டி: கோவில்பட்டியில் நடந்து வரும் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்காண அகில இந்திய ஹாக்கி போட்டியின் 5-ம் நாளான இன்று (செவ்வாய் கிழமை) காலை நடந்த போட்டியில் போபால் அணி வெற்றி பெற்றது.

கோவில்பட்டி கே.ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை 13-வது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் கடந்த 24-ம் தேதி தொடங்கி நடந்து வருகின்றன.

5-ம் நாளான இன்று காலை 7 மணிக்கு நடந்த 17-வது லீக் போட்டியில் போபால் நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணியும் ஒடிசா டாடா நாவல் ஹாக்கி அகாடமி அணியும் மோதின. இதில் 4 - 3 என்ற கோல் கணக்கில் போபால் நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி வெற்றிப் பெற்றது.

10-வது நிமிடத்தில் ஒடிசா, டாடா நாவல் ஹாக்கி அகாடமி அணி வீரர் தேவ்நோத் நன்வார் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் அடித்தார். 19-வது நிமிடத்தில் போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி வீரர் கேரோபின் லக்ரா பீல்டு கோல் முறையில் ஒரு கோல் அடித்தார்.

34-வது நிமிடத்தில் ஒடிசா, டாடா நாவல் ஹாக்கி அகாடமி அணி வீரர் பிரதாப் டோப்போ பீல்டு கோல் முறையில் ஒரு கோல் அடித்தார். 48-வது நிமிடத்தில் போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி வீரர் அமந்தீப் லக்ரா பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் அடித்தார்.

50-வது நிமிடத்தில் ஒடிசா, டாடா நாவல் ஹாக்கி அகாடமி அணி வீரர் ரோஹித் குல்லு பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் அடித்தார். 52-வது நிமிடத்தில் போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி வீரர் விஸ்வாஸ் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் அடித்தார். 55-வது நிமிடத்தில் போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி வீரர் விஸ்வாஸ் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் அடித்தார்.

பிரியாஸ் கவுடா மற்றும் பாலாஜி குமார் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி வீரர் விஸ்வாஸ்வுக்கு வழங்கப்பட்டது.

x