ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: ஜோஷ்னா, வேலவன் தங்கம் வென்றனர்


சென்னை: தேசிய இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் சென்னையில் நடைபெற்றது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் அபய் சிங், வேலவன் செந்தில்குமார் ஜோடி 11-4, 11-8 என்ற செட் கணக்கில் ராகுல் பைதா, சுராஜ் சந்த் ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

கலப்பு இரட்டையர் பிரிவில் அபய் சிங், ஜோஷ்னா சின்னப்பா ஜோடி 10-11, 11-2, 11-9 என்ற செட் கணக்கில் ஹரிந்தர் பால் சிங் சாந்து, ராதிகா சீலன் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. மகளிர் இரட்டையர் பிரிவில் பூஜா ஆர்த்தி, ராதிகா ஜோடி 11-3, 9-11, 11-1 என்ற செட் கணக்கில் ஜேனட், நிருபமா துபே ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது.