உலகக் கோப்பை வில்வித்தை இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி


யெச்சியோன்: உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. அதேவேளையில் ஆடவர் அணி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் தோல்வி அடைந்தது.

தென் கொரியாவின் யெச்சியோன் நகரில் உலகக் கோப்பை நிலை 2-ல்வித்தை போட்டி நடைபெற்று வருகிறது.இதில் மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் ஜோதி சுரேகா, பர்னீத் கவுர், அதிதி சுவாமி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி அரை இறுதி சுற்றில் அமெரிக்க அணியை எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய அணி 233-229 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முனனேறியது.

இறுதிப் போட்டியில் இந்திய அணி,உலகத் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள துருக்கியுடன் வரும் 25-ம் தேதிமோதுகிறது. துருக்கி அணி தனது அரைஇறுதி சுற்றில் 234-233 என்ற கணக்கில் தென் கொரியாவை தோற்கடித்தது.

ஆடவருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் தரவரிசையில் முதலிடத்தில் பிரியான்ஷ், பிரதமேஷ், அபிஷேக் வர்மா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் 21-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. - பிடிஐ