தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா


புவனேஷ்வர்: பெடரேஷன் கோப்பை போட்டி புவனேஷ்வரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போடடியில் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா 82.27 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.

முதல் 3 சுற்றுகளிலும் 2-வது இடத்தில் இருந்த நீரஜ் சோப்ரா 4-வது சுற்றில்தான் 82.27 மீட்டர் தூரம் எறிந்து முன்னிலை பெற்றார். டி.பி.மானு 82.06 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.