போனஸ் தொகையை விட்டுக்கொடுத்த ராகுல் திராவிட்


மும்பை: மேற்கு இந்தியத் தீவுகளில் சமீபத்தில் நடைபெற்ற ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடருடன் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் திராவிட் ஓய்வு பெற்றார். இந்நிலையில் டி 20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றதற்காக கூடுதல் போனஸ் தொகையான ரூ.5 கோடியை, பிசிசிஐ ராகுல் திராவிட்டுக்கு வழங்க முன் வந்துள்ளது. ஆனால் ராகுல் திராவிட் தனது சக உதவியாளர்களுக்கு வழங்கியது போன்று ரூ.2.5 கோடி போனஸ் தொகையே தனக்கு போதுமானது எனக்கூறி கூடுதல் தொகையை வாங்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.