விம்பிள்டன் டென்னிஸ் 2024: அரை இறுதியில் டோனா வெகிக்


விம்பிள்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் குரோஷியாவின் டோனா வெகிக் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அவர், அரை இறுதிக்கு முன்னேறுவது இதுவே முதன்முறையாகும்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரின் 9-வது நாளானநேற்று மகளிர் ஒற்றையர் பிரிவில்நடைபெற்ற கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 37-ம் நிலை வீராங்கனையான குரோஷியாவின் டோனா வெகிக், 123-ம் நிலை வீராங்கனையான நியூஸிலாந்தின் லுலுசனுடன் மோதினார். 2 மணி நேரம் 8 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டோனா வெகிக் 5-7, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

டோனா வெகிக் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அரை இறுதிக்கு முன்னேறுவது இது முதன்முறையாகும். இதற்கு முன்னர் அவர், அதிகபட்சமாக 2019-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் மற்றும் 2023-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.