மாநில வாலிபால் போட்டி: ஜேப்பியார் அணி சாம்பியன்


மாநில அளவிலான வாலிபால் போட்டியில் கோப்பையை வென்ற ஜேப்பியார் பல்கலைக்கழக மகளிர் அணியினர்.

சென்னை: மாநில அளவிலான வாலிபால் போட்டி சேலத்தில் உள்ள செயின்ட் பால் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தொடரை ஜான்சன் பிரண்ட்ஸ் கிளப் மற்றும் சேலம் மாவட்ட வாலிபால் சங்கம் இணைந்து நடத்தியது. லீக் அடிப்படையில் நடைபெற்ற இந்த தொடரில் சென்னை ஜேப்பியார் பல்கலைக்கழக மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 6 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் ஜேப்பியார் பல்கலைக்கழக அணியானது தமிழ்நாடு காவல்துறை (25-21, 25-23), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ( 25-17, 17-25, 27-25), டாக்டர் சிவந்தி கிளப் (27-25, 22-25, 25-23), பாரதியார் ஆத்தூர் (25-19, 19-25, 25-17), அமெரிக்கன் கல்லூரி (25-16, 25-22) ஆகிய அணிகளை தோற்கடித்தது.