விம்பிள்டன் டென்னிஸ்: ஸ்வியாடெக் தோல்வி


லண்டன்: லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவு ஆட்டத்தில் முன்னிலை வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) தோல்வியடைந்து வெளியேறினார். நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் கஜகஸ்தான் நாட்டு வீராங்கனை யூலியா புடின்சேவா 3-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் இகா ஸ்வியாடெக்கை சாய்த்தார். அதே நேரத்தில் ஆடவர் பிரிவு 4-வது சுற்றுக்கு செர்பியாவின் ஜோகோவிச், டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனே ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

டிஎன்பிஎல் கிரிக்கெட் நெல்லை அணி அபாரம்

சேலத்தில் நேற்று நடைபெற்ற டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தியது. முதலில் விளையாடிய சேப்பாக் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய நெல்லை அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

கனடா பாட்மிண்டன்: ரஜாவத் தோல்வி

கனடா ஓபன் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரியன்ஷு ரஜாவத் தோல்வி கண்டார். நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதி சுற்றுப் போட்டியில் உலகத் தரவரிசையில் உள்ள ரஜாவத், பிரான்ஸின் அலெக்ஸ் லேனியருடன் மோதினார். இதில் ரஜாவத் 17-21, 10-21 என்ற செட் கணக்கில் தோற்று அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறினார்.