விம்பிள்டன் டென்னிஸ்: சுமித் நாகல் தோல்வி


லண்டன்: கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 72-ம் நிலை வீரரான இந்தியாவின் சுமித் நாகல், 53-ம் நிலை வீரரான செர்பியாவின் மியோமிர் கெக்மனோவிச்சுடன் மோதினார். 2 மணி நேரம் 38 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சுமித் நாகல் 2-6, 6-3, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.