யூரோ கோப்பை கால்பந்து: போலந்தை வீழ்த்தியது நெதர்லாந்து


ஹாம்பர்க்: 17-வது யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியில் நெதர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் போலந்து அணியை வீழ்த்தியது.

யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஐரோப்பாவை சேர்ந்த 24 அணிகள் விளையாடுகின்றன. இந்நிலையில், டி பிரிவில் ஹாம்பர்க் நகரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து, போலந்து அணிகள் மோதின.

இரு அணி வீரர்களும் ஆரம்பம் முதலே தாக்குதல் ஆட்டத்தை மேற்கொண்டனர். போலந்து அணி முதல் கோலை அடித்தது. போலந்து வீரர் ஆடம் புக்ஸா 16-வது நிமிடத்தில் தனது அணிக்காக ஒரு கோலை அடித்தார். கார்னரிலிருந்து கிடைத்த பந்தை தலையால் முட்டிகோலாக்கினார் புக்ஸா. இதனால் நெதர்லாந்து வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து சுதாரித்து ஆடிய நெதர்லாந்து வீரர்கள் கோலடிப்பதற்காக ஆக்ரோஷ ஆட்டத்தை மேற்கொண்டனர். 29-வது நிமிடத்தில் நெதர்லாந்து கோடி கோ கோலடித்தார். இதனால் 1-1 என்ற கணக்கில் சமநிலை சமநிலை ஏற்பட்டது.

இடைவேளையின்போது 1-1 என்ற நிலையே நீடித்தது. முன்னிலை ஆட்டத்தின் 2-வது பாதியிலும் இரு அணி வீரர்கள் அற்புதமாக விளையாடினர். ஆனால் கோல் எதுவும் விழவில்லை. 83-வது நிமிடத்தின்போது நெதர்லாந்து வீரர் வெக்ஹார்ஸ்ட் ஒரு கோலடித்தார். இதன்மூலம் நெதர்லாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இறுதி வரை இந்த நிலை நீடிக்க நெதர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

23-வது விநாடியில் கோல்: நேற்று நள்ளிரவு 12.30மணிக்கு நடைபெற்ற குரூப் பி பிரிவு கால்பந்து லீக் போட்டியில், இத்தாலி, அல்பேனியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இத்தாலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முன்னதாக, ஆட்டம் தொடங்கிய 23-வது விநாடியில் அல்பேனிய வீரர் நெடிம் பஜ்ராமி கோலடித்து அசத்தல் சாதனை புரிந்தார்.

இத்தாலி அணிக்காக அலெசான்ட்ரோ பஸ்டோனி, நிக்கோலா பரேலா ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர். இறுதி வரை இதே நிலை நீடிக்க இத்தாலி 2-1 என்ற கணக்கில் வெற்றி கண்டது.

x