உகாண்டாவை 40 ரன்னில் சுருட்டி நியூஸி. ஆறுதல் வெற்றி | T20 WC


டிரினிடாட்: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ‘சி’ பிரிவில் டிரினிடாட்டில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் உகாண்டா - நியூஸிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த உகாண்டா 18.4 ஓவர்களில் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கென்னத் வைஸ்வா 11 ரன்கள் சேர்த்தார். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. நியூஸிலாந்து அணி தரப்பில் டிம் சவுதி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

டிரெண்ட் போல்ட், மிட்செல் சான்ட்னர், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 41 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து 5.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டேவன் கான்வே 22, ரச்சின் ரவீந்திரா 1 ரன் சேர்த்தனர். சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்ட நியூஸிலாந்து அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது