பாரிஸ் ஒலிம்பிக்கில் சுமித் நாகல்


ஜெர்மனியில் ஹெய்ல்பிரோன் நெக்கார்கப் சாலஞ்சர் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இந்தியாவின் சுமித் நாகல், சுவிட்சர்லாந்தின் அலெக்சாண்டர் ரிட்சர்ட்டை எதிர்த்து விளையாடினார். 2 மணி நேரம் 22 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சுமித் நாகல் 6-1, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றார். இதன் மூலம் நேற்று வெளியிடப்பட்ட சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் சுமித் நாகல் 18 இடங்கள் முன்னேறி 77-வது இடத்தை பிடித்துள்ளார். இதன் அடிப்படையில் வரும் ஆகஸ்ட் மாதம் பாரிஸ் நகரில் நடைபெற ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர் பிரிவில் விளையாடுவதை உறுதி செய்துள்ளார் சுமித் நாகல்.