தோனி இன்னும் 2 ஆண்டுகள் விளையாடுவார்: மைக்கேல் ஹஸ்ஸி


சென்னை: நடப்பு ஐபிஎல் தொடருன் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வுபெறக்கூடும் என்ற கருத்து பரவலாக உள்ளது. இந்நிலையில் இணையதள விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி பேசியதாவது:

தோனி அடுத்த ஆண்டு விளையாடுவாரா எனகேட்டால், இந்த சூழ்நிலையில் உங்கள் யோசனையும்என் யோசனையும் ஒன்றுதான். தோனி தன் மனதிற்குள் வைத்திருப்பார். வெளியில் சொல்ல மாட்டார்.ஆனால் அவர் தொடர்ந்து விளையாடுவார் என்றேநாங்கள் நம்புகிறோம். அவர், தற்போதும் நன்றாகபேட்டிங் செய்கிறார். தன்னை நன்றாகத் தயார்ப்படுத்திக் கொள்கிறார். பயிற்சி முகாமுக்கு முன்கூட்டியே வந்து நிறைய பந்துகள் விளையாடுகிறார். உண்மையிலேயே அவர், எல்லா சீசனிலும் மட்டையுடன் நல்ல தொடர்பில் இருக்கிறார். அவரது உடலைப் பொறுத்தவரை நாம் அவரை நல்ல படியாகப் பாதுகாக்க வேண்டும். கடந்த சீசனுக்குப் பிறகு தோனி முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

என்னுடைய தனிப்பட்ட பார்வையில், தோனி இன்னும் 2 ஆண்டுகள் விளையாடுவார் என்றே கருதுகிறேன். இருப்பினும் அவர் முடிவு என்னவென்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அவர் தான் முடிவை எடுப்பார். இந்த நாடகத்தை இன்னும் கொஞ்சம் கட்டி எழுப்புவார் என்றே நினைக்கிறேன். எனவே அவர் உடனடியாக முடிவு எடுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

இவ்வாறு மைக்கேல் ஹஸ்ஸி பேசினார்.