திமிரி அடுத்த வணக்கம்பாடி கிராமத்தின் தர்மராஜா கோயிலில் துரியோதனன் படுகளம்


திமிரி அடுத்த வணக்கம்பாடி கிராமத்தில் உள்ள தர்மராஜா கோயிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த வணக்கம்பாடி கிராமத்தில் ஸ்ரீ திரவுபதி அம்மன் சமேத தர்மராஜா திருக்கோயிலில் கடந்த 2-ம் தேதி மகாபாரத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து, தினசரி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மகாபாரத சொற்பொழிவும், இரவு கட்டை கூத்து குழுவினரால் நாடகம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், மகாபாரதத்தின் முக்கிய நிகழ்வான 18-ம் போரின் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கோயில் அருகாமையில் உள்ள மைதானத்தில் 100 அடி நீளம் கொண்ட துரியோதனன் பிரம்மாண்ட உருவம் வடிவமைக்கப் பட்டிருந்தது. தொடர்ந்து, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

இதில், வணக்கம்பாடி, மோசூர், வளையாத்தூர், பாளையம், தாமரைபாக்கம் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். மாலையில் தீமிதி திருவிழாவும், இரவு சாமி ஊர்வலம் மற்றும் நாடகம் நடைபெற்றது.

x