‘உன்னை அறிந்து கொள்’ : இஸ்கானின் புதிய சிறப்புப் பயிற்சி வகுப்பு


சென்னை: இஸ்கான் அமைப்பு சார்பில் ‘உன்னை அறிந்து கொள்’ என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

இதுகுறித்து அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியப்பட்டிருப்பதாவது: இஸ்கான் சார்பில் ‘உன்னை அறிந்து கொள்’ என்ற சிறப்பு வகுப்பு நடைபெற உள்ளது. மே 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 6 நாட்கள், காலை 8 மணி முதல் 9 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளன. இந்த வகுப்பில் 6 அமர்வுகள் உள்ளன. இந்த அமர்வுகளில் வாழ்க்கை சாரத்தை பகவத் கீதையின் வாயிலாகக் கற்றுக் கொடுக்கப்பட இருக்கிறது.

மேலும், ஆன்மிகப் பாதையில் உள்ள மாணவர்களின் சந்தேகங்களுக்கு தெய்வீக விஞ்ஞானத்தின் உதவியுடன் தீர்வு கொடுக்கப்படும். இந்த வகுப்பில் நேர்மையாக பயிற்சி செய்பவருக்கு அமைதியும் ஆறுதலும் கிடைக்கும். அந்தவகையில், இந்த வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் 9848175279 என்ற எண்ணில் வாட்ஸ் மூலம் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.