தியேட்டர், ஓடிடியில் புதுவரவு என்னென்ன? - ஒரு ரவுண்டப்


இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடிக்களில் வெளியாகியுள்ள படங்கள் குறித்த பட்டியலைப் பார்ப்போம்.

தியேட்டர் லிஸ்ட்: ஹிப்ஹாப் ஆதியின் ‘PT சார்’, ராமராஜனின், ‘சாமானியன்’, வெற்றியின் ‘பகலறியான்’ ஆகிய தமிழ்ப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ளன.

> மம்மூட்டியின் ‘டர்போ’, பிஜூமேனனின் ‘தலவன்’ (Thalavan) மலையாளப் படங்களை தியேட்டர்களில் காணலாம்.

> சன்னி தியோலின் ‘பையா ஜி’ (Bhaiyya Ji) இந்திப் படமும், ‘லவ் மீ’ தெலுங்கு படமும் வெளியாகியுள்ளது.

நேரடி ஓடிடி ரிலீஸ்: பால் க்ரவுடரின் ‘ப்ளூ ஏஞ்சல்ஸ்’ (The Blue Angels) ஹாலிவுட் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்டுள்ளது. இதனை தற்போது காண முடியும்.

திரையரங்குக்குப் பிறகான ஓடிடி: விஷால் - ஹரி கூட்டணியின் உருவான ‘ரத்னம்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.

>அஜய் தேவ்கனின் ‘மைதான்’ படத்தை அமேசான் ப்ரைமில் ‘ரென்ட்’ முறையில் பார்க்க முடியும்.
> கரீனா கபூர், தபுவின் ‘Crew’ இந்திப் படத்தை நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம். > ‘பிரசன்னா வதனம்’ (Prasanna Vadanam) தெலுங்கு படத்தை ஆஹா ஓடிடியில் பார்க்க முடியும்.

வெப் சீரிஸ்: ஹாலிவுட் வெப்சீரிஸான ‘Jurassic World: Chaos Theory’ நெட்ஃப்ளிக்ஸில் உள்ளது.