மே 30 முதல் ‘உப்பு புளி காரம்’


சென்னை: பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா, தீபக் பரமேஷ் மற்றும் ராஜ் அய்யப்பா என பலர் நடித்துள்ள வெப் தொடர், ‘உப்பு புளி காரம்'. விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ள இந்த வெப் தொடரை எம்.ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார்.

இதன் கதை, வயதான தம்பதி மற்றும் அவர்களின் 4 குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் நிகழும் சம்பவங்களைச் சுற்றி பின்னப்பட்டுள்ளது. காதல், காமெடி, சென்டிமென்ட்டை உள்ளடக்கிய இந்தத் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் 30-ம் தேதி வெளியாகிறது.