பிருத்விராஜின் ‘ஆடுஜீவிதம்’ மே 26-ல் ஓடிடியில் வெளியாகும் என தகவல்


சென்னை: பிருத்விராஜ் நடித்துள்ள ‘ஆடுஜீவிதம்’ திரைப்படம் மே 26-ம் தேதி ஓடிடியில் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ‘ஆடு ஜீவிதம்’ நாவலை அடிப்படையாக கொண்டு உருவான படம் ‘ஆடுஜீவிதம்’. படத்தை ப்ளஸ்ஸி இயக்க, பிருத்விராஜ், அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு சுனில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பான் இந்தியா முறையில் வெளியான இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.80 கோடி என கூறப்படுகிறது. கடந்த மார்ச் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதன் எதிரொலியாக படம் உலகம் முழுவதும் ரூ.150 கோடியை வசூலித்தது.

இந்நிலையில் படம் வரும் மே 26-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளதாக கூறப்பபடுகிறது. படத்தை மலையாளம் தவிர்த்து தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் காண முடியும்.