தியேட்டர், ஓடிடியில் புதுவரவு என்னென்ன? - ஒரு ரவுண்டப்


இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடிக்களில் வெளியாகியுள்ள படங்கள் குறித்த பட்டியலைப் பார்ப்போம்.

தியேட்டர் ரிலீஸ்: > சூரி நடித்துள்ள ‘கருடன்’, விஜய் கனிஷ்காவின் ‘ஹிட் லிஸ்ட்’, குழந்தைகள் படமான ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’, நாசரின் ‘தி அகாலி’ ஆகிய தமிழ்ப் படங்கள் வெள்ளிக்கிழமையான இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளன.

> விஸ்வக் சென் நடித்துள்ள ‘கேங்ஸ் ஆஃப் கோதாவரி’ (Gangs of Godavari) தெலுங்கு படத்தை திரையரங்குகளில் காணலாம்.

> அர்ஜூன் அசோகனின் ‘ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் கொச்சி’ (Once Upon a Time in Kochi) மலையாள படம் இன்று வெளியாகியுள்ளது.

> ராஜ்குமார் ராவ், ஜான்விகபூரின் ‘மிஸ் அன் மிஸஸ் மஹி’ இந்திப் படம் திரையரங்குகளில் திரையிடப்பட்டுகொண்டிருக்கிறது.

> ரென்னி ஹார்லினின் ‘தி ஸ்ட்ரேஞ்சர்ஸ்: சாப்டர் 1’ (The Strangers: Chapter 1) ஹாலிவுட் படம் வெளியிடபட்டுள்ளது.

ஓடிடி ரிலீஸ்: > சஞ்சய் கபூரின் ‘ஹவுஸ் ஆஃப் லைஸ்’ (House of Lies) இந்திப் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி தற்போது காணக் கிடைக்கிறது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: ரன்தீப் ஹூடாவின் ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ (Swatantrya Veer Savarkar) ஜீ5 ஓடியில் வெளியாகியுள்ளது.

> எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள ‘ஒரு நொடி’ தமிழ் படம் ஆஹா ஓடிடி தளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

> ஹாரர் படமான ‘தி ஃபர்ஸ்ட் ஓமன்’ The (First Omen) டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் உள்ளது.

இணைய தொடர்: இந்தியின் புகழ்பெற்ற காமெடி - ட்ராமா வெப்சீரிஸான ‘பஞ்சாயத்’ தொடரின் 3வது சீசன் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

> பொன்வண்ணன், வனிதா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘உப்பு புளி காரம்’ தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் காணக்கிடைக்கிறது.

> பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் அறிமுக அனிமேஷன் தொடரான ‘புஜ்ஜி அன்ட் பரைவா’ (Bujji and Bhairava) அமேசான் ப்ரைமில் உள்ளது.