தூய்மைப் பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து: இது பரங்கிப்பேட்டை பக்ரீத்!


கடலூர்: கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை தர்மம் செய்வோம் குழுமம் சார்பாக தொடர்ச்சியாக ஏழாவது ஆண்டாக பரங்கிப்பேட்டை பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பிரியாணி விருந்து வழங்கி கவுரவிக்கப்பட்டது.

பரங்கிப்பேட்டை தர்மம் செய்வோம் குழுமம் சார்பாக ஏழாவது ஆண்டாக பரங்கிப்பேட்டை பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பிரியாணி விருந்து வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்வு தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஜூன் 19) மதியம் நடைபெற்றது. குழுமத் தலைவர் தமீம் அவர்கள் தலைமை தாங்கினார்.

குழும செயலாளர் ஹாஜி அலி முன்னிலை வகித்து வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினர்களாக வார்டு கவுன்சிலர்கள் கோ.அருள் முருகன், வேல்முருகன், சமூக ஆர்வலர்கள் பசுமை ஹாஜி, நஜீர் உபைத்துல்லாஹ், அப்துல் காதர் மதனி, தூய்மை ஆய்வாளர் வீரானாந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை தர்மம் செய்வோம் குழு நிர்வாகிகள் செயலாளர் மற்றும் களப்பணியாளர்கள் மலை நடராஜ், நபில்,அஸ்லம்,உசேன், அப்துல் ரஜாக், ஹாஜா உசேன் ஆகியோர் செய்தனர். இதில் சுமார் 100 பேருக்கு பிரியாணி விருந்து தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.