தகுதி படைத்தவர்கள் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: கோவை ஆட்சியர் அழைப்பு


கோவை: பத்ம விருதுகளுக்கு தகுதி படைத்தவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அனுப்பலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: "தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மேன்மை பொருந்திய பணிகளுக்காக இந்திய அரசாங்கம் பத்ம விருதுகளை ( பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ) வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப் பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு வரும் 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் பத்ம விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதுகள் தொழில், இனம், உத்தியோகம், பாலினம் ஆகிய வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது.

ஆட்சியர் கிராந்தி குமார் பாடி

இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://awards.gov.in மற்றும் https://padmaawards.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து ஆன்லைன் வழியாகவே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அதன் 3 நகல்களுடன் ஜூன் 28-ம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், கோவை மாவட்டம் அவர்களிடம் நேரில் சமர்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் பரிந்துரைகளுடன் அரசுக்கு அனுப்பிவைக்கப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x