பிபவ் குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி: நீதிமன்றத்தில் கண்ணீர்விட்ட ஸ்வாதி மாலிவால்


புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ஸ்வாதிமாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் அர்விந்த் கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரின் ஜாமீன் மனுவைடெல்லி நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. முன்னதாக, விசாரணையின்போது ஸ்வாதி மாலிவால் கண்ணீர்விட்டு அழுத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டுக்கு ஆம் ஆம் கட்சி எம்.பி.யும் டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவருமான ஸ்வாதிமாலிவால் கடந்த 13-ம் தேதி சென்றார். அப்போது கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார், ஸ்வாதியை தாக்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஸ்வாதி அளித்த புகாரின் பேரில் பிபவ் குமார்மீது கொலை மிரட்டல், மானபங்கம், தாக்குதல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் டெல்லிபோலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பிபவ் குமாரை கடந்த 19-ம் தேதி கைது செய்தனர்.

முன்னதாக ஸ்வாதிக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் அவர் தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். கேஜ்ரிவால் வீட்டுக்கும் சென்று விசாரணை நடத்திய போலீஸார், அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் ஜாமீன் கோரி பிபவ் குமார் தாக்கல் செய்த ஜாமீன்மனுவை டெல்லி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கவுரவ் கோயல் நேற்று விசாரித்தார். இதில்அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு பிபவ் குமாரின் ஜாமீன் மனுவை அவர் தள்ளுபடி செய்தார். விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நிலையில் தற்போது ஜாமீன்வழங்கினால் அது விசாரணைக்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிடும் என்று நீதிபதி தெரிவித்தார்.

முன்னதாக இம்மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.

அப்போது முதல்வரின் இல்லத்தில் அத்துமீறி நுழைந்ததாக பிபவ் குமார் தரப்பில் வாதிடப்பட்டது.

இது தொடர்பாக பிபவ் குமாரின்வழக்கறிஞர் ஹரிஹரன் வாதிடும்போது, “ஸ்வாதி மாலிவாலிடம் வெளியில் காத்திருக்குமாறு கூறப்பட்டது. ஆனால் அவர் பாதுகாப்பு வளையத்தை மீறி உள்ளே சென்றார். இது அத்துமீறல் ஆகும். ஆனால் எங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்வாதி மாலிவால் அத்துமீறி சென்றவுடன் அவர் ஏன் உள்ளே அனுமதிக்கப்பட்டார் என்று பிபவ்குமார் கேட்டார். பிறகு பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளேசென்று அவரை மரியாதையுடன்வெளியேற்றினர். ஸ்வாதி மாலிவாலின் குற்றச்சாட்டுகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை” என்றார்.

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரானவாதங்களை வழக்கறிஞர் ஹரிஹரன் பதிவு செய்தபோது, நீதிமன்ற அறையில் இருந்த ஸ்வாதிமாலிவால் திடீரென மனம் உடைந்து அழுதார்.

இதையடுத்து ஸ்வாதி மாலிவால் கூறும்போது, “நான் மோசமாக தாக்கப்பட்டேன். ஆனால் என்னை பாஜக ஏஜென்ட் என்றுகூறுகின்றனர். சமூக ஊடகத்தில் ட்ரோல் செய்வதற்கு ஆம் ஆத்மிகட்சியிடம் மிகப்பெரிய கட்டமைப்பு உள்ளது. பிபவ் குமார் ஜாமீனில் வந்தால் எனது உயிருக்கும் எனது குடும்பத்தினர் உயிருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும்” என்றார்.

x