சென்செக்ஸ் 1,197 புள்ளிகள் உயர்வு


மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் நேற்று புதிய உச்சம் தொட்டன. சென்செக்ஸ் 1,197 புள்ளிகள் உயர்ந்து 75,418 ஆகவும், நிஃப்டி 370 புள்ளிகள் உயர்ந்து 22,967 ஆகவும் ஏற்றம் கண்டன. சென்செக்ஸ் 1.61%, நிஃப்டி 1.64% உயர்ந்தன.

அதிகபட்சமாக அதானி எண்டர்பிரைசஸ் 6.24% வளர்ச்சி கண்டது. அதானி போர்ட்ஸ் 3.56%, மாருதி சுசூகி 3.16%, எல் அண்ட் டி 3.09%, ஆக்ஸிஸ் பேங்க் 3.09%, இன்டஸ்இண்ட் 2.91%, எம் அண்ட் எம் 2.79% வளர்ச்சி கண்டன. நேற்றுமுன்தினம் மத்திய அரசுக்கு ரூ.2.11 லட்சம் கோடி டிவிடெண்ட் வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியது. 2022-23 நிதி ஆண்டில் ரூ.87,416 கோடி டிவிடெண்ட் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அதைவிட 140% கூடுதலாக டிவிடெண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு எதிர்பார்த்த டிவிடெண்டை விடவும் இது இரு மடங்கு அதிகம் ஆகும். நேற்றைய பங்குச் சந்தை ஏற்றத்துக்கு டிவிடெண்ட் அறிவிப்பு முக்கிய காரணம் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

x