6-ம் கட்ட மக்களைவத் தேர்தலில் 889 வேட்பாளர்கள் போட்டி


நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப் பதிவு நிறைவு பெற்றுள்ளது. இன்று ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து மே 25-ம் தேதி 6 ம் கட்டமாக 58 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் உத்தர பிரதேசத்தில் 14, ஹரியாணாவில் 10, மேற்குவங்கத்தில் 8, பிஹாரில் 8, டெல்லியில் 7, ஒடிசாவில் 6, ஜார்க்கண்டில் 4, ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. இந்த தொகுதிகளில் மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இறுதிக் கட்டமாக ஜூன் 1-ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி உட்பட 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.